Parampariya Tamil Maruthuvam

Tamil Parampariya Maruthuvam. Kurippugal. Muligai Maruthuva kurippugal ingu pathivu seiyapadum...

Responsive Ads Here

வியாழன், 12 நவம்பர், 2020

சிரிப்பே மருத்துவம்



பல நேரத்தில் நம்மிடம் உள்ள பல அருமையான பண்புகள் நம்மால் உணராமலையே தெரியாமல் போய்விடும். அதேபோல் எந்த மருந்தையும் நாடாமல் பல நோய்களைத் தடுக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம் என்பது நம்முள் பலருக்கு தெரியாமலையே இருக்கின்றது. நம்மால் வெளியிடப்படும் ‘சிரிப்பு’ என்ற வெளிப்பாட்டிற்கு நிகர் இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது.

நாம் பல லட்ச மதிப்புள்ள உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு, சிரிக்க வேண்டிய இடத்தில சிரிக்காமல், முகத்தை ஏழுக்கோனத்திற்கு ‘உம்’ என்று வைத்துக்கொண்டால் பார்க்கவே சகிக்காது. நம்மை சூழ்ந்துள்ள சில நபர்களின் எதிர்மறையான எண்ணங்களையும் ஆற்றலையும் கூட நேர்மறையானதாக மாற்றியமைக்ககூடும் சக்தியைக் கொண்ட ஒரே முக வெளிப்பாடு ‘சிரிப்பு’ மட்டுமே ஆகும். இவை நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்விப்பது மட்டும் அல்லாமல் நம் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்கிறது.

பல ஆராய்ச்சிகளில் இவை உறுதி செய்யப்பட்டு, ‘சிரிப்பு சிகிச்சை’ என்று கூட தொடங்கப்பட்டுவிட்ட நிலையை பெற்றுள்ளது. பல ஹார்மோன் செயல்பாட்டிற்கு உகந்த சிகிச்சை அளிக்கும் திறனைப் பெற்றுள்ளது. முக வசீகரத்தை மெருகேற்றி சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகுடையவர்களாக காட்சி அளிக்கிறது. தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை, பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோர்களையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இதற்கு காரணம், போதிய அளவிற்கான சந்தோஷ சூழ்நிலை குறைபாடே ஆகும்.

மகிழ்ச்சி நம்மை தேடி வரும் என்று நின்று கொண்டு இருக்காமல், அத்தகைய சூழலை நாம்  ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள், செல்லப் பிராணிகள், வயதானவர்கள் போன்றவர்களுடைய செயல்களை மிகவும் உண்ணிப்பாக ஒரு ஐந்து நிமிடம் கவனித்தால், நம்மை அறியாமலையே நம்முள் சிரிப்பும்., பூரிப்பும் வந்து அடையும். குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் அவர்களுடைய குறு குறு பார்வையும், செல்லப் பிராணிகளின் சேட்டையும், வயதானவர்கள் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசும் வம்புக் கதைகளையும் பார்த்தால் வயிறு வலிக்கும் அளவிற்கான சிரிப்பும் சந்தோஷமும் நம்மை தேடி வரும்.

உலகிலையே மிகவும் கடினமாகக் கருதப்படும் செயல் மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், நகைச்சுவை பகுதி என்பது மிகவும் முக்கியமானதாக ஒன்றானதாக உள்ளது. மக்களை சிரிக்க வைப்பதற்க்காக, நகைச்சுவை நடிகர்கள் தங்களின் முழு படைப்பாற்றலையும் பயன்படுத்துகின்றனர். சிரிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும் மகத்துவமும் இருக்கின்றபடியால்தான் இவை அனைத்தும் மேற்ற்கொள்ளப் படுகின்றன.

“வாய் விட்டு சிரி, நோய் விட்டுப் போகும்” என்ற பழமொழி ஏதோ வாய்ப்போக்கில் சொன்ன ஒரு வாக்கியம் இல்லை. சிரிப்பின் மதிப்பை அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதை கூறி இருக்க முடியும். ஒரு சிறு புன்னகை புரிதல், வாய் விட்டு சிரித்தல் போன்றவை நம் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தி நோய் நொடி இல்லாத நாட்களை நமக்கு அளித்து மகிழ்விக்கும் என்பதே இதன் பொருளாகும்.

“சிரிப்போம் சிரிப்போம் சிரித்துக்கொண்டே இருப்போம்”.

-ரேவதி ராம்குமார்

நோயின் ஆதாரம் எது?

 


நோய்கள்

டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், கோழி காய்ச்சல், சளி காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மழை பெய்துவிட்டால் வைரஸ் காய்ச்சல், கோடைகாலத்தில் சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை, ஏன் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று ஏராளமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.

இந்த மாதிரியான பல்வேறு நோய்களுக்கும் மூலக் காரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

ரொம்ப சிம்பிள். பத்து பேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால், யாரோ ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் மக்கள் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் எல்லா நோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா?

நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுபட்ட காற்றில், தூசிலும் அடங்கி இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால், அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்தானே நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!

தானாக இயங்கும் உடல்

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ, கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்புப் படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்பு மண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலை களைப் பார்த்துக்கொண்டி ருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ ஒருவர் மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில்தான் உடல் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்கிறது.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல்தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர்தான், நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச் செயல்களும் நன்கு நடைபெற உதவுகிறது. இந்த உயிராற்றல் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது உடலுக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைத் தாக்கு கின்றன. உடல் நோயைப் பெறுகிறது.

யார் காரணம்?

ஆக, நம்முடைய உடல் நோயைப் பெறுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்தப் பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்துவிடுகிறது. நோய் ஏற்புத் தன்மை அதிகரித்துவிடுகிறது. இதனால் உடலில் எளிதாக மாற்றங்கள் தோன்றுகின்றன. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழு சக்தியோடு இருக்கும் வரை பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி என்று எதைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அது மட்டுமில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆகப் பெரிய, சிக்கலான செல்களின் கூட்டமைப்பு கொண்ட படைப்பு மனிதன்தான். அதனால்தான் மனிதன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். ஆனால் பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ வெறும் ஒரு செல் உயிரிகள்தான். சிக்கலான வளர்ச்சியடைந்த செல்களின் அமைப்பு கொண்ட மனிதனின் உயிரை, அவற்றால் பறிக்க முடியாது. மேலும் சோதனைச் சாலையில் இந்தப் பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் இறந்த செல்களையே உணவாகக் கொடுத்து வளர்க்கிறார்கள். இறந்த செல்களில் மட்டுமே இவை செழித்து வளர முடியும்.

உயிருள்ள மனித செல்கள் இந்தப் பாக்டீரியா, வைரஸ் களைவிட பரிணாம வளர்ச்சியில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவை என் பதைக் கவனத்தில் கொண்டோமானால் நம்முடைய நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் என்பதை எளிதில் ஒத்துக்கொள்ள முடியாது. நம்முடைய உயிராற்றல் பலவீனமடையும் போதே உடலின் நோய் ஏற்புத் தன்மை அதிகரிக்கிறது. அப்போது பாக்டீரியா, வைரஸ் மட்டுமல்ல... தூசு, மாசு, நீர், வெப்பம், குளிர் போன்ற எல்லாம் உடலைப் பாதித்து நோய்களை உருவாக்கலாம். உயிராற்றலின் பலமே, உடலின் பலம்.

பொது நல மருத்துவர் - ஜி.கணேஷன்

அக்கு பங்சர் சிகிச்சை

 


அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன?

அக்கு பங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம், நோய்களை களையும் மருத்துவ முறை.

அக்கு பங்சர் சிகிச்சையில், நோய் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

இயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணம். பசியோடு சாப்பிடாமல் இருப்பதும், பசியின்றி சாப்பிடுவதும். அளவுக்கதிகமாக சாப்பிடுவதும், ஓய்வு நேரத்தில் உழைப்பதும், அதிகபடியான தூக்கமும் இவைகளே இயற்கை விதிமீறல். இவற்றோடு புகை, மது போன்ற தீய பழக்க வழக்கங்கள் சேர்ந்து, நோய்களை உருவாக்குகின்றன. மேற்சொன்ன காரணங்களால் உடல் உறுப்புகளில், கழிவுகள் தேக்கம் கொள்கின்றன. இதுவே நோயின் முதற் நிலை. இந்த கழிவுத் தேக்கங்கள் அதிகமாகி, உடலில் உள்ள உறுப்புகளை பாதிக்கத் துவங்குவது இரண்டாம் நிலை.

அக்கு பங்சர் சிகிச்சையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் ஏதேனும் உண்டா?

பசிக்கும் போது சாப்பிடுவதும். இரவு நேரங்களில் உறங்குவதும் ஆரோக்கியத்திற்கான அடிப்படை வழிகள். இவற்றை முறையாக பின்பற்றினாலே போதுமானது. வேறு பத்தியங்கள் எதுவும் கிடையாது.

அக்கு பங்சர் முறையில் சிகிச்சை மேற்கொள்ள, ஆங்கில மருத்துவ முறையில் பரிசோதனைகள் தேவையா?

கண்டிப்பாக பயன்படாது. அக்கு பங்சர் சிகிச்சைக்கு, அது தேவையே இல்லை. மனித உடலில், சக்தி மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக வேதி மாற்றங்கள் ஏற்படுகின்றன. பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது எல்லாமே, வேதி மாற்றங்களை தான். இவற்றை வைத்து, சக்தி மாற்றத்தை அறியவோ, சீர்படுத்தவோ முடியாது.

பரிசோதனைகள் இல்லாமல், நோய் குணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஒரு நோயாளியின் உணர்வை மட்டுமே, நூற்றுக்கு நூறு நம்ப முடியும். அது என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை. பரிசோதனை கருவிகளையும், பரிசோதனைகளையும், ஒரு நோயாளியின் உணர்விற்கு ஈடாக கருத முடியாது.

சில சிகிச்சை முறைகளில், நோய் அதிகமாகி பின் குறையும் என்கின்றனரே! அக்கு பங்சர் சிகிச்சையிலும் அப்படி வாய்ப்புண்டா?

ஒரு சிலருக்கு அப்படி ஏற்படலாம். அது நல்ல மாற்றம்தான். ஒருவருக்கு நுரையீரலில் சளி அதிகமாகி இருமல் வருகிறது. இதில் சளிதான் நோய். இருமல், சளியை வெளியேற்றும் உடலின் முயற்சி. சிகிச்சையின் போது, சிலருக்கு இருமல் அதிகரித்து வெளியேறும். அப்படி வெளியேறுவது மட்டும்தான், குணமடைய ஒரே வழி.

அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, திடீரென்று காயச்சல், தலைவலி வந்தால், ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளலாமா?

அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலம் அடைந்து, கழிவுகள் நீங்கும். அப்போது காய்ச்சல், தலைவலி போன்ற கஷ்டங்கள் உண்டாகும். அப்படி உண்டானால், சிகிச்சை முறை நன்கு வேலை செய்கிறது என்று அர்த்தம்.

அக்கு பங்சரில், மன நோய்களை குணப்படுத்த முடியுமா?

கண்டிப்பாக. மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. உள்ளுறுப்புகளின் சீரற்ற இயக்கமே மூளையில் பிரதிபலிக்கிறது. உடல் உறுப்புகளில் சக்தி குறையும்போது, மனநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே, ஒரு நோயின் ஆரம்ப நிலை.

அக்கு பங்சர் சிகிச்சை பெற, எத்தனை நாளைக்கு ஒரு முறை மருத்துவரை பார்க்க வர வேண்டும்?

தினமும் மருத்துவரை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை; அவசியமும் இல்லை. ஏழு முதல் ௧௫ நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது, நோயிலிருந்து விரைவாக குணமடைய வழிவகுக்கும்.

பெண்கள், மாதவிடாய் காலங்களில் சிகிச்சை செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளில் இருந்து குணமடைய, சிகிச்சை உதவும்.

ஆதாரம் : அங்குபெஞசர் மருத்துவம்.

ஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்


 

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது.

பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். .

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும்.

இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

ஆதாரம் : தேன்கூடு இணையத்தளம்

ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள்

 நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.

நோய்ப் படுக்கையில் இருக்கும்போது நோயாளிகளுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தள்ளிவிட முயற்சிப்பார்கள். உணவே இல்லாத நிலையில், உடல் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத் தவிர்க்க நோயாளிகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கச் சொல்வார்கள். நோயாளிகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறு நன்கு ருசிக்கும்.

தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அருமையான உணவாகப் பயன்படுகிறது. ஆனால், கைக்குழந்தைகளாக இருந்தால் ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சரிபாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தனித்த சாறாகவே கொடுத்து விடலாம் அல்லது பழத்தை உரித்துக் கொடுத்து உண்ணச் சொல்லலாம்.

அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும் ஆற்றல் இந்த ஆரஞ்சுப் பழச்சாறுக்கு உண்டு. அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும்போது ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் உடன் பேதி நின்று நல்ல குணம் கிடைக்கும். இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் தூங்கச் செல்லும்முன் நூறு மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.

இதேபோல் ஒன்றுவிட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் உறக்கக்கேடு நிரந்தரமாக நீங்கி நிம்மதியான தூக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆரஞ்சுப் பழச்சாறு பற்களை வலிமைப்படுத்தக் கூடியது. மேலும் பற்கள் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளையும் அகற்றும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த ஆரஞ்சுப்பழத்தை பயன்படுத்துவோம், ஆரோக்கியம் பெறுவோம்.

ஆதாரம் : ஈகரை தமிழ்களஞ்சியம்

மனித உடலமைப்பு

 


  1. பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.
  2. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
  3. மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
  4. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
  5. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.
  6. நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.
  7. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.
  8. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
  9. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
  10. உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
  11. ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
  12. கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
  13. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
  14. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
  15. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
  16. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
  17. நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும்.
  18. ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.
  19. மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.
  20. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
  21. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.
  22. கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
  23. ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.
  24. ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  25. மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
  26. மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும்.
  27. மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
  28. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  29. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.
  30. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.
  31. ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.
  32. மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது.
  33. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.
  34. மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
  35. பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும்.
  36. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.
  37. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

ஆதாரம் : தேன்கூடு வலைத்தளம்

நோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்

 கண்கள் உப்பியிருந்தால்...

என்ன வியாதி: சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ்: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில்குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.

என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது

என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை

 

என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான். 

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள்

என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி

என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்னை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்

என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி. 

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.

என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

ஆதாரம் : எழுத்து