Parampariya Tamil Maruthuvam

Tamil Parampariya Maruthuvam. Kurippugal. Muligai Maruthuva kurippugal ingu pathivu seiyapadum...

Responsive Ads Here

புதன், 11 நவம்பர், 2020

கண் பார்வையை பாதுகாக்க சில வழிகள்..!



கண் பார்வையை பாதுகாக்க சில வழிகள்..!

கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதிலேயே கண்ணாடி அணியும், பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகரித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் நம் கண் பார்வையை பாதுகாக்க நாம் அக்கறை எடுத்துக் கொள்ளாததே. எனவே பார்வையை பாதுகாக்க சில டிப்ஸ்களை இங்கு தருகிறோம்..!


வெளிச்சம் குறைந்த இடங்களில் படிப்பதை, மற்ற செயல்கள் செய்வதை தவிருங்கள். குறைந்த வெளிச்சத்தில் கண்களுக்கு வேலை கொடுப்பது நல்லதல்ல.


பச்சை நிறக் காய்கறிகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


அதிகம் வெயில் இருக்கும் காலங்களில் கூலிங் கிளாஸ் அணிவது நல்லது.


இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் இருந்து டிவி,கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பதை தவிருங்கள்.


ஒரு ரப்பர் பந்தை எடுத்து, அதனை சுவற்றில் எரிந்து அந்த பந்து செல்லும் திசைகளிலெல்லாம் உங்கள் பார்வையை திருப்புங்கள். இது கண்ணுக்கான சிறந்த பயிற்சி.


உடல் பாகங்களைப் போல் நீர்ச்சத்து இல்லை என்றால் கண்களும் வறட்சி அடையும். எனவே தினசரி 4 முதல் 6 லிட்டர் தண்ணீரை அருந்துங்கள்.


அதிகரித்து வரும் தூசிகளால், கண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன், சுத்தமான நீரினால் கண்களை கழுவுங்கள்.


தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். இல்லையென்றால் கண் பார்வை பாதிக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக